#IPL2020 : டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு !

Default Image

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் 17-வது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி  ஷார்ஜாவில்  உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

மும்பை  மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ளது.இரு அணிகளும் தலா 2 வெற்றி,2 தோல்வி அடைந்துள்ளன. ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி  4 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 4 வது இடத்தில் உள்ளது.இரு அணிகளும் 3 வது வெற்றிக்காக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே,அப்துல் சமத் , கேன் வில்லியம்சன் , பிரியான் கார்க், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், சந்தீப் சர்மா,சித்தார்த் கவுல் , டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குருனல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal