இனி MRI ஸ்கேன் ₹ 50 மட்டுமே ! டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
#Dshorts : நாட்டின் மலிவான விலையில் ஆய்வகமானது டிசம்பரில் குருத்வாரா பங்களா சாஹிப்பில் அமைக்கப்படுகிறது .இதன் மூலம் ₹ 50 க்கு MRI ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம் என்று டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டி.எஸ்.ஜி.எம்.சி) தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள குருத்வாரா வளாகத்தில் உள்ள குரு ஹர்க்ரிஷன் மருத்துவமனையிலும் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் செயல்பாடு அடுத்த வாரம் தொடங்குகிறது என்றும் டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.600 மட்டுமே செலவாகும் என்று டி.எஸ்.ஜி.எம்.சி தலைவர் மஞ்சீந்தர் சிங் சிர்சா கூறினார்.
₹ 6 கோடி மதிப்பிளான ஆய்வுக்கான இயந்திரங்கள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும்.இதில் டயாலிசிஸுக்கு நான்கு இயந்திரங்களும், அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே மற்றும் எம்.ஆர்.ஐ.க்கு தலா ஒரு இயந்திரமும் இதில் அடங்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த MRI ஸ்கேன் செய்ய சலுகை தேவைப்படுவோருக்கு ₹ 50 மட்டும் என்றும் ,மற்றவர்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் ஒன்றுக்கு ₹ 800 செலவாகும்.இதில் யார் யாருக்கு சலுகை தேவைப்படுகிறது என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிர்சா கூறினார்.
தனியார் ஆய்வகங்களில், ஒரு எம்ஆர்ஐக்கு குறைந்தபட்சம், 2,500 செலவாகும்.இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்டவர்கள் எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் வெறும் ₹ 150 க்கு பெற முடியும்.
இந்த ஆய்வகத்திற்கு தேவையான இயந்திரங்கள் நிறுவப்பட்டு,டிசம்பர் முதல் வாரத்தில் செயல்படத் தொடங்கும் என்றும், இவைதான் நாட்டில் மிகவும் குறைந்த செலவில் நோயை கண்டறியும் ஆய்வகம் என்று சிர்சா கூறினார்.