முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது , தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது – மு.க.ஸ்டாலின்

ஜிஎஸ்டி தொகையை பெறுவதில் முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது , தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்றது. அப்போது, நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தகவல் கூறப்பட்டது.மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.1.51 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ. ரூ.11,269 கோடி ஜிஎஸ்டி இழப்பிடாக மத்திய அரசு தர வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகையை பெறுவதில் முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது , தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது. அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில்
கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும் – மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி – மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெற
முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அக்.5-ம் தேதி நடக்கும் @GST_Council கூட்டத்தில் #GST இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும் – மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி – மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெற @CMOTamilNadu முயற்சிப்பாரா? pic.twitter.com/xS67HuGjd3
— M.K.Stalin (@mkstalin) October 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025