மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்!

Default Image

மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது கொஞ்ச நாட்களாக தமிழக அரசு மக்களுக்காக சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, போக்குவரத்து துறை, தொழில்துறை என சில தளர்வுகளை அரசு மக்களுக்காக ஏற்படுத்தி வரக் கூடிய நிலையில் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய கூடிய வகையில் மேலும் தளர்வு நிலையை அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பேருந்தில் செல்ல கூடிய அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு மிகுந்த பயனாக உள்ளது.

அதே சமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மின்சார ரயில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி புரிய கூடிய பல்லாயிரக்கணக்கானோர் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்தவர்கள். ஊரடங்கால் புறநகர் மின்சார ரயில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்யக்கூடிய தனியார் தொழிலாளர்களின் நெருக்கடி குறைந்து நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும் எனவும், குறித்த நேரத்தில் பணிக்கு சென்று வர ஏதுவாக இருக்கும் எனவும் தமிழக மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்