ஹர்தாஸ்:கொரோனாவைக் காட்டிலும் பெரும்தொற்று பாஜக -மம்தா கடும் காட்டம்
பாஜக மிகப் பெரிய தொற்று என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹத்ராஸ் விவகாரம் குறித்த பேரணியில் காட்டமாக தெரிவித்தார்
உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மட்டுமின்றி அவருடைய உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் எரித்தது சர்ச்சையாகியது.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று கண்டன பேரணியை பிர்லா கோளரங்கத்துக்கும், மேயோ ரோடு காந்தி சிலைக்கும் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தினார்.
மார்ச்.,25ந்தேதி நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு மம்தா நடத்திய முதல் பேரணி இது இப்பேரணியில் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்று இல்லை. பா.ஜ.க. தான் பெருந்தொற்று. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நடத்தப்படுகிற அட்டூழியங்கள் தான் இந்த மிகப்பெரிய தொற்று நோய்
நாம் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இப்படிப்பட்ட அட்டூழியங்கள் நடப்பது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.
நாடு முழுவதும் ஒரே சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மக்களுக்கான அரசாக இல்லை, மக்களுக்கு எதிரான அரசாக, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசாக, விவசாயிகளுக்கு எதிரான அரசாகவே அது செயல்படுகிறது.கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் தான் இது, சமூக தொற்றாக தற்போது மாறி உள்ளது. ஏனென்றால் வெளியே செல்லாமல் பாதுகாக்கப்பட்ட இடங்களில் இருக்கிறவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது என்று கூறினார்.