பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசல்.. 229 ரன்கள் இலக்கு..!

இன்றைய 16-வது அணியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. இப்போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 26 ரன்னில் வெளியேறினர். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க பிருத்வி ஷா , ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் விளாசி 66 ரன்கள் குவித்தார்.
பின்னர், களம் கண்ட ரிஷாப் பந்த் 38 ரன்கள் விளாசினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 88 * ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் குவித்தனர்.
229 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளார்.