#IPL2020 : பெங்களூர் அணி வெற்றிபெற 155 ரன்கள் இலக்கு
இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 154 ரன்கள் அடித்துள்ளது.
இன்று நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள செயிக் சயத் ( Sheikh Zayed Stadium) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஸ்மித் ,பட்லர் ஆகியோர் களமிறங்கினர்கள்.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலே பெங்களூர் வீரர் உடனா பந்துவீச்சில் ஸ்மித் 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து பட்லர் 22 ரன்களில் சைனி பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.மேலும் சாம்சனும் 4 ரன்னில் சாகல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.இதன் பின் உத்தப்பா 17 ரன்களில் வெளியேற ,ஓரளவு பொறுப்பாக விளையாடிய மகிபல் லொம்ரோர் 47 ரன்களில் வெளியேறினார்.பின்பு பராக் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.களத்தில் ஆர்ச்சர் 16 ரன்கள் , திவாட்டியா 24 ரன்களுடன் இருந்தனர். பெங்களூர் அணி பந்துவீச்சில் சாகல் 3 விக்கெட்டுகள் ,உடனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.