அசாமில் ரத்து செய்யப்பட்ட போலீஸ் தேர்வின் தேதி மீண்டும் அறிவிப்பு.!
செப்டம்பர்-20 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட துணை ஆய்வாளர்கள் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நிறுத்திவைக்கட்பட்ட துணை ஆய்வாளர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வு தற்போது, நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று ஒரு நேற்று தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு முறையான நடைமுறை விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் பிரதீப் குமாருக்கு தேர்வை வெளிப்படையாக நடத்தவும், முடிவுகளை விரைவாக அறிவிக்கவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
.