தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்ப்போம்!
நாம்மில் அதிகமானோர் ஏலக்காயை ஒரு வாசனை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏலக்காய் வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.
ஏலக்காயில், சுண்ணாம்பு, பாஸ்பராஸ், பொட்டாசியம், இரும்புசத்து, சோடியம் மற்றும் விட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த தினமும் ஒன்று எடுத்து, போட்டு மென்று குணமாகிறது. தற்போது இந்த பதிவில் அதன் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
செரிமானம்
நம்மில் பலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இந்த பிரச்சனை உள்ளவர்கள், ஒரு ஏலக்காய் வாயில் போட்டு மென்றால், அது செரிமான நீரை சுரக்க செய்து, எளிதில் செரிமானமாக உதவுகிறது.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த எரிச்சல் ஏற்படும் போது ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் சரியாகும். பசியின்மை பிரச்சனை உள்ளவர்களில் ஏலக்காயை மென்று சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
வயிற்று பிரச்சனை
வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு மந்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் மென்று சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சளி பிரச்சனை
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சளி பிரச்னை ஏற்படுவதுண்டு. இந்த பிரச்னை உள்ளவர்கள், ஏலக்காயை மென்று சாப்பிட்டால், சளியை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது சளியை உருவாக்க கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
இதயம்
இதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டால், கேட்ட கொழுப்புக்களை கரைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.