கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியன் – பீதியடைந்த குடும்பத்தினர்!

Default Image

உத்திர பிரதேசத்தில் கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியனை பார்த்து பீதியடைந்து வனத்துறையினரை அழைத்த குடும்பத்தினர்.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவிலுள்ள சஸ்திரபுரம் எனும் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. இதனை கண்டு பீதியடைந்த குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை கட்டுக்குள் கொண்டுவந்து அது கட்டுவிரியன் பாம்பு என அடையாளம் கண்டுள்ளனர். இதுகுறித்து கூறிய அவ்வீட்டின் உறுப்பினரான சிவானி எங்களது கழிவறையில் இந்த பாம்பை கண்டு மிகவும் பயந்தோம். இதனால் கதவை பூட்டிவிட்டு என்ன செய்வதென்று தெரியாததால் வனத்துறையினருக்கு நாங்கள் அழைத்தோம்.

அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய வனவிலங்கு பாதுகாப்பு திட்ட இணை இயக்குனர் சத்தியநாராயணன், பாம்புகள் கையாளுவது மிக சவாலானது என்பதை விட அவைகள் சிக்கிக் கொள்ளும் பொழுது மக்கள் தவறான மூட நம்பிக்கையினால் அந்த பாம்பின் மீது இரக்கம் காட்டுவது கூட எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும் நகர்ப்புற மற்றும் பொது பாதுகாப்பு வனவிலங்குகளை எந்த ஒரு சூழ்நிலையையும் எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்களது மீட்பு குழுவுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்