5 ஒவர் முடிவில் ஹைதராபாத் 33/1 ..!
இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிவருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார்.
தற்போது களத்தில் டேவிட் வார்னர் 6 , மனிஷ் பாண்டே 25 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். ஹைதராபாத் அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளனர். 5 ஒவரில், 5 பவுண்டரி சென்றுள்ளது.