சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்புக்கு உத்தரபிரதேச அரசே உறுதி – யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “உத்தரபிரதேசத்தின் தாய்மார்களுக்கும், மகள்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக நினைப்பவர்களின் அழிவு உறுதி செய்யப்படுகிறது. அதற்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும், இது எதிர்காலத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமையும். உத்தரபிரதேச அரசு அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளது ” இது எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் வாக்குறுதி” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
उत्तर प्रदेश में माताओं-बहनों के सम्मान-स्वाभिमान को क्षति पहुंचाने का विचार मात्र रखने वालों का समूल नाश सुनिश्चित है।
इन्हें ऐसा दंड मिलेगा जो भविष्य में उदाहरण प्रस्तुत करेगा।
आपकी @UPGovt प्रत्येक माता-बहन की सुरक्षा व विकास हेतु संकल्पबद्ध है।
यह हमारा संकल्प है-वचन है।
— Yogi Adityanath (@myogiadityanath) October 2, 2020