ஹிட்மேன் , பொல்லார்ட் அதிரடி .. பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு..!

Default Image

இன்று நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் ( Sheikh Zayed Stadium) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பிறகு  இறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் பெவிலியன் திருப்பினார்.

இதையடுத்து, இறங்கிய இஷான் கிஷன் 28 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விளையாடி வந்த ரோஹித் சர்மா  70 ரன்கள் விளாசினார்.

மத்தியில் களம் கண்ட  பொல்லார்ட் , ஹார்திக் இருவரும் அதிரடியாக விளையாடினர்.  இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தனர். களத்தில் பொல்லார்ட் 47 , ஹார்திக் 30 ரன்களுடன் நின்றனர்.

192 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்