மறைந்த துறவி ராமகோபாலன் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்!

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் (94) உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளரான துறவி ராமகோபாலன் வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமானதால் மாலை காலமானார்.
அவருடைய உடல் பொது சுகாதார பணியாளர்களிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டது.ஆம்புலன்ஸில் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்த உடலை பார்க்க இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025