5 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.. இந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும்!
5ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கை அக். 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது.
தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது இன்று நள்ளிரவுடன் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இவைக்கெல்லம் அனுமதி:
- அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதி.
- 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கு மற்றும் மல்டிப்ளக்ஸ் அரங்குகள் இயங்க அனுமதி.
- பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்.
- மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களிடம் அனுமதி பெறவேண்டும்.
- பொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
தடை தொடரும்:
- நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்தப்படும்.
மேலும், நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.