தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்..!
சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து அக்டோபர் 2-ம் தேதி இரவு 07.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 6:45 நெல்லை சென்றடையும். பின்னர் நெல்லையிலிருந்து ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 07.45 க்கு புறப்படும் ரயில் மறுநாள் 06.35க்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே அக்டோபர் 2-ம் தேதி மாலை 5 .45 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 5-ம் தேதி 08.25க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி இரவு 08.40-க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பின்னர் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 4-ம் தேதி மாலை 6.10 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை இடையே அக்டோபர் 2-ம் தேதி தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை, மதுரை, மதுரை,சென்னை இடையே பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும்.