மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், நலனையும் காக்க வேண்டியது நமது கடமை – முதலமைச்சர் பழனிசாமி

Default Image

இந்த முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதியோர் நலன் காக்கவும், அவர்களின் சேவைகள் அங்கீகரிக்கவும் ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் முதல் நாள் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து முதியோருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்று கூவம் பெருந்தகை பெரியோர்களின் சிறப்பைப் பற்றி கூறுகிறார். நாம் அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை தனது தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும்

பாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்பட தமிழ்நாடு அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வா்த்தி தேவையான அடிப்படை விதிகளை பூர்த்தி செய்திடவும் மூத்த குடிமக்கள் பாடல் வகையில் பல்வேறு திட்டங்களை சிறிய முறை செயல்படுத்தி வருகிறது.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், முதியோருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டில், 13,53,736 முதியோர்கள் பயனடைந்துள்ளனர். முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இடையே அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ள சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்களின் மூலம் 1,060 முதியோர் மற்றும் 1,106 குழந்தைகள் பயனடைத்து வருகின்றனர்.

சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் – 2007 படி, தமிழ்நாட்டில் 91 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், மொத்தம் 4,546 வழக்குகள் பெறப்பட்டு 3,979 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும், பாயட்ட அளவில் மாட்ட ஆட்ரியர்கள் தலைமையிலும் முதியோர் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று பாயல் காலத்தில் ஆறாவது முதியோர் பயன்பெறும் வகையில், அனைத்து பாடங்களிலும் உள்ள 122 சமுதாய சமையற்கூட்டங்கள் மூலம் 78,937 முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு, தொலைபேசி வாரியாக 1942 முதியோரின் அழைப்புகளுக்கு தேவையான மனநல தேவையான மருத்துவ வாதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.

மாண்புமிகு அம்மாவின் அரசு, சிறந்த முறையில் முதியோர் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை பாராட்டி, மத்திய அரசு 2019-ஆம் ஆண்டிற்கான வயோஷ்ரேஷ்த சம்மன் விருது” தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கௌரவித்துள்ளது. முதியோர் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அம்மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்