இன்றுடன் நிறைவடையும் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்!
கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிந்து கங்கை நதிக்கரை நாகரிகங்கள் கொண்ட கீழடியில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி இதுதான். 40க்கு மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு சங்ககால பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தான் அங்கு அகழ்வாராய்ச்சி நடக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால் குழிகள் முழுவதுமாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. இதனால் இன்றுடன் நிறைவடையுமா எனும் சந்தேகத்துடன் இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் பாதியிலேயே நின்றது.
ஆனால் மழை அதிகளவில் இல்லாத காரணத்தினால் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்துள்ளது. 6 கட்டமாக நடைபெற்ற இந்த அகழ்வாராய்ச்சியில் எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு செம்புகள், அரியவகை அணிகலன்கள், எழுத்து கொண்ட மண்பாண்டங்கள், சுடுமண் முத்திரைகள் என பல்வேறு தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்றுடன் இந்த அகழ்வாராய்ச்சிகள் நிறைவடைகிறது.