Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை பிறப்பித்தது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து , கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. 4-ம் கட்ட தளர்வுகள் இன்றுடன் முடிய உள்ள நிலையில், மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.