தோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – சஞ்சு சாம்சன்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்த சீசனை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். உதாரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் 74 ரன்களும் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்து வருகிறது.
பல கிரிக்கெட் வீரர்கள் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி என்று புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் கேப்டன் தோனியை போல் எந்த வீரரும் விளையாட முடியாது. அவரைப்போல் விளையாடும் முயற்சி செய்வதே தேவையில்லாத ஒரு விஷயம் தான் மேலும் என்னை கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டுக் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை.
தோனியை போன்று நான் விளையாடியதாக ஒருபோதும் நினைத்ததில்லை . கேப்டன் தோனி மிகவும் சிறந்த கிரிக்கெட் வீரர் மிகவும் சிறந்த கேப்டன் நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி வருவதாக நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சர்வேதச மைதானத்தில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024![Director Vetrimaran - Vijay sethupathi from Viduthalai 2 movie](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Director-Vetrimaran-Vijay-sethupathi-from-Viduthalai-2-movie.webp)
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/kothandaraman-actor.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)