கொரோனா தடுப்பூசிக்காக ‘ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது’ – தமிழிசை சவுந்தரராஜன்
கொரோனா தடுப்பூசிக்காக ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது என்று தெலுங்கானா கவர்னர் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, “கோவாக்சின்” தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன். அங்கு அவர் கூறுகையில், திறம்பட்ட கொரோனா தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் ஹைதராபாத்தை நோக்கி வருவதாக நேற்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். தெலுங்கானா மட்டுமல்ல, நமது விஞ்ஞானிகள் ஒரு பயனுள்ள, மலிவு மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை கொண்டு வருவார்கள் என்று உலகம் முழுவதும் நம்புகிறது என்று கூறினார்.
அந்த வகையில், தடுப்பூசியை தயாரிக்க விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அயராது உழைத்து வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இது தொடங்கப்படும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.