வரி எல்லாம் கட்ட எனக்கு பிடிக்காது..அனல் பரந்த விவாதத்தில் ட்ரம்ப் அடம்!
நான் வரிகளை செலுத்த விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்து அந்நாட்டு அரசியல் சட்டத் திட்டத்தின்படி முதல்முறையாக இரு அதிபர் வேட்பாளர்களும் விவாதம் நடத்த தொடங்கினர்.
இவ்விவாதமானது இருவருக்கும் இடையே நடைபெற்றது.அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு வருமான வரியே இதுவரை செலுத்தவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டி இருந்தது.
மேலும் அதிபர் ட்ரம்ப் கோடி கோடியாக சம்பாதித்த போதிலும் வருமானத்தை குறைத்து காட்டி வெறும் 750 டாலரை மட்டுமே வரியாக செலுத்து உள்ளார் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்திக்கு அதிபர் டிரம்பின் பதில் என்ன? என்று ஜோ பிடன் விவாதத்தின் போது கேட்டார் அதற்கு அதிபர் டிரம்ப் நான் இந்த வருமான வரிகளை செலுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார். பணக்காரர்கள் வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கு டிரம்ப்தான் காரணம் என்று ஒரு கருத்து அங்கு நிலவி வரும் சூழ்நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். இதன் பின்பு இனவெறி, கலிபோர்னியா தீவிபத்து, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதம் அனல் பறந்தது.இருவரும் நேருக்கு நேராக காரசாரமாக மோதிக்கொண்டனர்.