உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு – பிரியங்கா காந்தி

Default Image

உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு  என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று  முதல்வர் ஆதித்யநாத் அரசாங்கத்தை குறித்து பேசினார்.

கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ஹத்ராஸில் ஒரு தலித் பெண் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்தார். இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனைகளில் போராடி வந்தார். மேலும், ஹத்ராஸ், ஷாஜகான்பூர் மற்றும் கோரக்பூரில் கற்பழிப்பு சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்வி குறியாக உள்ளது. இதனால், குற்றவாளிகள் வெளிப்படையான குற்றங்களைச் செய்கிறார்கள். இந்த சிறுமியைக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், உத்தரபிரதேசத்தின் பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வரான யோகியாதித்யநாத் நீங்கள் தான் பொறுப்பு என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்