அண்ணாத்த திரைப்படத்தின் அட்டகாசமான புதிய அப்டேட்..!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி, சுரேஷ் சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.
மேலும் அண்மையில் இந்த படத்திலிருந்து வெளிவந்த தீம் மியூசிக் ரசிகர்களுக்கு இடையே பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ரஜினி ரசிகர்ளை உற்சாகப்படுத்தும் வகையில் அண்ணாத்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
ஆம் அண்ணாத்த படப்பிடிப்பை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் துவங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025