வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குடும்பத்தை கத்தியால் குத்திய நபர் கைது..!

Default Image

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவரது மகன் சதீஷ் சதிஷிற்கு சுகன்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் வீட்டின் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக நாராயணன் என்பவர் இடம் வாடகைக்கு கொடுத்துள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை நாராயணனிடம் வீட்டு வாடகை பணத்தை சதீஸ் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நாராயணனால் வாடகை பணம் செலுத்த முடியவில்லை. இதனால் இவருக்கும் சதிஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தம் கேட்டு மாடிக்கு வந்த சுகன்யா மற்றும் சந்திரமோகன் வாடகை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில்பெரிய கைகலப்பு ஆன காரணத்தால் தீஷ் மற்றும் அவரது உறவினர்கள் நாராயணனை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சந்திரமோகன் மற்றும் அவரது மகன் மருமகளை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதில் சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்துள்ள்ளார். மேலும் சதீஷ் மற்றும் சந்திரமோகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்