நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 1 முதல் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வு.!

நாக்பூர் பல்கலைக்கழகம் அக்டோபர் 1 முதல் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வை நடத்தபடவுள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து அக்டோபர் 1 முதல் நாக்பூர் பல்கலைக்கழகம் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதில், சுமார் 78,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று பல்கலைக்கழக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் ‘RTMNU Pariksha’ என்ற செயலியை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக தேர்வு வாரிய இயக்குநர் பிரபுல்லா சபாலே தெரிவித்தார்.
பல்கலைக்கழக அட்டவணையின்படி அக்டோபர் 1 முதல் 18 வரை தேர்வுகள் நடைபெறுகிறது. பல்வேறு பாடங்களில் சுமார் 1.82 லட்சம் கேள்விகள் 1,852 ஆசிரியர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும், ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுபாஷ் சவுதாரி கூறுகையில், இந்த பயன்பாடு மாணவர்களுக்கு வசதியாக இருக்கும், மேலும் குறைந்த இணைய இணைப்பிலும் செயல்படும் என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024