பகத்சிங் பிறந்த நாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் -பன்னீர்செல்வம் ட்வீட்

பகத்சிங் அவர்களின் பிறந்த நாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலை போராட்ட மாவீரன் பகத் சிங்கின், 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,”இந்திய விடுதலையே எம் லட்சியம். தேசம் விடுதலை பெறும்வரை எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அதனை மகிழ்ச்சியாய் ஏற்பதே புரட்சி” என முழங்கி, சுதந்திர வேள்வியில் உயிர்த்தியாகம் செய்த மாவீரன் பகத்சிங் அவர்களின் பிறந்த நாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.