புதுச்சேர் யூனியன் பிரதேசத்தில் பள்ளிகள் திறப்பு… முதலமைச்சர் ஆலோசனையில் முடிவு…
புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிராந்தியங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரியில் பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது குறித்து, நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன்,புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, அதில், முதல் கட்டமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிராந்தியங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், வரும், 5ம் தேதியில் இருந்தும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள், வரும் 12ம் தேதி முதல், விருப்பத்தின் அடிப்படையில், பள்ளிக்கு சென்று, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிக்கு வர, கட்டாயம் பெற்றோரின் ஒப்புதல் தேவை. கொரோனா பரவல் அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், பள்ளிகள் திறக்கக் கூடாது. தொற்று பரவல் நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்த ஆலோசனையில் முடிவுகள் எடுக்கப்பட்டுடன.