ராஜஸ்தான் அணி அபார வெற்றி..!
ஐபிஎல் டி20 தொடரின் 9-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் சதம் விளாசி 106 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், அடுத்த சில நிமிடங்களில் கே.எல்.ராகுல் 69 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய மேக்ஸ்வெல் 13, நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணி 224 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் இறங்கினர். பட்லர் வந்த வேகத்தில் 4 ரன் மட்டும் எடுத்து வெளியேறினர். பின்னர், சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய சாம்சன் அரைசதம் அடித்து வெளியேறினர். அதிரடியாக விளையாடி வந்த சாம்சன் 85 ரன் குவித்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய திவாட்டியா 53 ரன்கள் விளாசினார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 19.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.