அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி – திருமாவளவன்

எஸ்பிபி மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிவிட் செய்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில், அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமிதம். அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று. அனைத்துலக அளவில் அனைத்துத் தரப்புக்கும் நேர்ந்த பேரிழப்பு என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி மறைவு:
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமிதம்!
அவரது இழப்பு ஈடுசெய்ய இயலாத ஒன்று. அனைத்துலக அளவில் அனைத்துத் தரப்புக்கும் நேர்ந்த பேரிழப்பு. #SPBalasubrahmanyam pic.twitter.com/63G05MPbRv— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 25, 2020