உலகளவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி தயாராக இருக்கும்.. சினோவாக்.!
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று சீனாவை சார்ந்த சினோவாக் நிறுவனம் அது தான் உருவாக்கும் கொரோனா தடுப்பூசியை அடுத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்கா உட்பட உலகளவில் விநியோகிக்க தயாராக இருக்கும் என்று கூறியது.
சினோவாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீடோங் கூறுகையில், கொரோனாவாக் தனது மூன்றாவது மற்றும் இறுதி சுற்று மனித சோதனைகளை முடிக்க உள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், அதை அமெரிக்காவில் விற்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்கும் என்று கூறினார்.
தனக்கு, தனிப்பட்ட முறையில் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில், எங்கள் சீனாவிற்கும், வுஹானுக்காகவும் தயாரிக்கப்பட்டது. கொரோனா வைரஸை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், நாங்கள் சரிசெய்தோம் என்று கூறினார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதே எங்கள் குறிக்கோள். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் கடுமையான விதிமுறைகளால் சீன தடுப்பூசிகளின் விற்பனையைத் தடுத்துள்ளன. அதை மாற்றக்கூடும் என்றார்.
பிரேசில், துருக்கி மற்றும் இந்தோனேசியாவில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் தற்போது 24,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பங்களாதேஷ் மற்றும் சிலியில் கூடுதல் சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.