இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? – கே.எஸ்.அழகிரி ட்வீட்
இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? என்று கே.எஸ்.அழகிரி ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ்.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்தியாவின் தலைசிறந்த பாடகரும், 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்ற திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடகரை இன்று இழந்திருக்கிறோம். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம் ? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும் ? அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ரசிகர் பெருமக்களுக்கும், திரையுலகத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட 6 தேசிய விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடகரை இன்று இழந்திருக்கிறோம்.
— KS_Alagiri (@KS_Alagiri) September 25, 2020