மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம்!
மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்தை கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டம்.
மத்திய அரசு புதிய 3 சட்டங்கள் கொன்ட வேளாண் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்யக்கூடிய நிலத்தில் விளைவிக்கக்கூடிய பயிர்களின் விலை நிர்ணயத்தை பயிரிடுவதற்கு முன்பாகவே நிர்ணயித்து பண ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் விலை வீழ்ச்சியை தடுக்கலாம் எனவும் மத்திய அரசால் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய வேளாண் திட்டத்தை கண்டித்து பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு இடத்தில் விவசாயிகளால் இந்த புதிய திட்ட மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திருவாரூர், நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட 15 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.