“இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றினை இழந்துவிட்டது!” – குடியரசுத் தலைவர் இரங்கல்
பாடகர் எஸ்.பி.பி. உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று உயிரிழந்தார். அவர், 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது இரங்கலை தெரிவித்தார்.
In the passing of music legend SP Balasubrahmanyam Indian music has lost one of its most melodious voices. Called ‘Paadum Nila’ or ‘Singing Moon’ by his countless fans, he was honoured with Padma Bhushan and many National Awards. Condolences to his family, friends and admirers.
— President of India (@rashtrapatibhvn) September 25, 2020
இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், “இசை புராணக்கதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்து செல்லும் போது இந்திய இசை அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற ரசிகர்களால் “பாடும் நிலா” என்று அழைக்கப்பட்ட இவருக்கு பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.