பொருள்கள் வழங்க தாமதம் – ரேஷன் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்!
ரேஷன் கடையில் பொருள்கள் வழங்க தாமதமானதால் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்.
வேலூரில் உள்ள சலவன்பெட் எனும் பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் வழக்கமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இலவச அரிசியை வழங்கி வருவதால் முதியோர்களும் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்களும் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது பயோமெட்ரிக் சரியாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டு, அனைவரும் வெயிலிலேயே நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள.
இதனால் முதியோர்களும் பொதுமக்களும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர், அதனை தொடர்ந்து இரண்டு கடையின் ஊழியர்களையும் கடைக்கு உள்ளேயே வைத்து பொதுமக்கள் கடையை மூடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் மற்றும் வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து கடையின் உள்ளே இருந்த கடை ஊழியர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.