ஜாகீர் நாயக்கின் டிவி, மற்றும் யூடியூப் சேனலுக்கு தடை… என்.ஐ.ஏ பரிந்துரை….

Default Image

இஸ்லாமிய மத பிரசாரகர், ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் டிவி’ செயலி மற்றும் அவரது, ‘யூ டியூப்’ சேனலுக்கு இந்தியாவில் தடை விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், தன் ‘பீஸ் டிவி’ மூலம், மத வெறுப்புணர்வை துாண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன், அந்த, ‘டிவி’ ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ‘பீஸ் ஆப்’ என்ற மொபைல் போன் செயலி மூலம், மத வெறுப்புணர்வையும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களையும், ஜாகிர் நாயக் மேற்கொண்டு வருவதை, புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள  அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விடும் நடவடிக்கையில், ஜாகிர் நாயக் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வு துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த சேனல் மற்றும் செயலிக்கு தடை விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதேபோல், ஜாகிர் நாயக் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு, ஜிகாதி குழுக்களுடன் உள்ள தொடர்பும், இந்தியாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு ஆட்களை நியமிக்க, அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ அமைப்பு, ‘ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி, யூ டியூப் வீடியோ ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்’ என, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai