பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
இன்று ஐபிஎல் டி20 தொடரின் 6-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில்நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே அகர்வால் 26 ரன்னில் வெளியேற, பின்னர் இறங்கிய நிக்கோலஸ் பூரன் 17 ரன்னுடன் விக்கெட்டை இழக்க பின்னர் கே.எல்.ராகுல் தனது அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசி 132* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். 207 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல் , பின்ச் இருவரும் இறங்கினர். படிக்கல் 1 ரன்னில் வெளியேற அடுத்து இறங்கிய ஜோஷ் பிலிப் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், மத்தியில் இறங்கிய டிவில்லியர்ஸ் 28 , வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியாக பெங்களூர் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும், பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.