ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியை சார்ந்தவர் விமானி சிவாங்கி சிங். இவர் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றினார்.
இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு பயிற்சிக்காக விமானப்படை அகாடமியில் சேர்ந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் போர் விமானி என்ற பட்டம் பெற்றார். ஹைதராபாத்தில் பயிற்சி முடிந்ததும், சிவாங்கி மிக் -21 இன் போர் விமானியாக உள்ளார்.
ராஜஸ்தானில் இருக்கும் விமானப்படை தளத்தில் இருந்து சிவாங்கி சிங் தற்போது அம்பாலாவில் இருக்கும் கோல்டன் ஏரோ என்ற 17 -வது படையில் இனைய உள்ளார். ராஜஸ்தானில் விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் உடன் சிவாங்கி சிங் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரபேல் விமானம் ஓட்டுவதற்கு சிவாங்கி சிங்கிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா பிரான்சுடன் ரூ .59,000 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பத்து ரஃபேல் ஜெட் விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டன. அவர்களில் 5 பேர் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதன் ஒரு பகுதியாக பிரான்சில் உள்ளனர். அனைத்து 36 விமானங்களும் 2021 இறுதிக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.
ரஃபேல் ஜெட் விமானங்களின் இரண்டாவது தொகுதி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும். முதல் ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் ஜூலை 29 அன்று இந்தியா வந்தடைந்தன.