விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் தடங்களில் போரட்டம்..!

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், இன்று முதல் விவசாயிகளின் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சரவன் சிங் பாந்தர் விவசாய மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 24(இன்று) முதல் 26 வரை ‘ரயில் நிறுத்தம்’ போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி இன்று விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமிர்தசரஸில் ரயில் தடங்களில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.