பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறுமியின் வங்கி கணக்கில் ரூ .10 கோடி.?
சிறுமியின் வங்கி கணக்கில் பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ .10 கோடி இருப்பு வைக்கபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் வங்கிக் கணக்கில் ரூ .10 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை கண்டு அந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், இந்த சிறுமி, கடந்த 2018 முதல் பன்ஸ்டியில் உள்ள அலகாபாத் வங்கி கிளையில் ஒரு கணக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமி, கடந்த திங்களன்று வங்கிக்குச் சென்றுள்ளார், அங்கு அதிகாரிகள் சிறுமியின் கணக்கீழ் ரூ .9.99 கோடி இருப்பதாக கூறினர்.
இதனையடுத்து, பன்ஸ்டி காவல் நிலையத்திற்குச் சென்று அந்த சிறுமி புகாரளித்தார். அதில், கான்பூர் தேஹத் மாவட்டத்தைச் சேர்ந்த நீலேஷ் குமார் என்ற நபர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது அடையாள விவரங்களை கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் வங்கி கணக்கில் நிதியை மாற்றுவதற்கு இது தேவை என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்ஸ்டி காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார்.
இருப்பினும், செய்தி நிறுவனமான டி.என்.ஏ-யின் அறிக்கையின்படி, சிறுமியின் கணக்கில் ரூ .5,000 மட்டுமே இருந்தது, ஆனால், சிறுமியின் கணக்கில் ரூ .17 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.