#BREAKING : ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் வழங்க சசிகலா எதிர்ப்பு..!
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நரசிம்ம மூர்த்தி சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், என்னைப்பற்றிய விஷயங்கள் தொடர்பாக 3-வது நபருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த தகவலையும் வழங்கக்கூடாது எனவும் வழக்கில் தொடர்பு இல்லாத 3-வது நபர் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்பதால் விவரங்களை அளிக்க கூடாது என கர்நாடக சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதைதொடர்ந்து, சசிகலா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பதிலளிக்க கர்நாடக சிறைத்துறை மறுத்துவிட்டது.