சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
அதில், கண்ணம்மாள், சதீஷ்குமார் சுகுமாரா,முரளி சங்கர்,மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி,சந்திரசேகரன், நக்கீரன்,சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக அதிகரிக்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்#Highcourt pic.twitter.com/VPor5J8N3r
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 23, 2020