நாங்குநேரி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..!
நாடு முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், பல முக்கிய தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாராயணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.