9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர்நீதிமன்றம்

Default Image

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி  100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்த செப்டம்பர் 30க்கும் மேல் அவகாசம் நீட்டிப்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 100% கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்ததாக பெற்றோர்களிடம் இருந்து வந்த 111 புகார்களில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், 9 பள்ளிகள் மொத்த கட்டணத்தையும் செலுத்துமாறு நிர்பந்தித்ததாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த 9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பள்ளிகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகாரளிக்க இ- மெயிலை உருவாக்கி அது பற்றி விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்