வலிமை படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்..!

தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .
மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானது , ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் அனைத்தும் முடிந்தவுடன் அஜித் தொடங்க கூறியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
மேலும் தற்பொழுது வலிமை திரைப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.