சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்…!
ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதியது இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது . மேலும் இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் , ஸ்மித் உடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இறுதியாக சஞ்சு சாம்சன் 34 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார், மேலும் அதில் 9 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்திருந்தார்.
மேலும் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சனை பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றார்கள் அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் மிகவும் அதிரடியாக விளையாடினர், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த கீப்பராக மட்டும் இல்லாமல் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். மேலும் இந்தியாவில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர் சஞ்சு சாம்சன் மற்ற அணிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது ஆனால் இந்தியா அணியில் மட்டும் தான் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
மேலும் இந்தியாவில் கேப்டன் தோனிக்கு பிறகு மாற்று ரிஷப் பண்ட் என்று சொல்கிறார்கள் ஆனால் அவரை விட மிகவும் சிறப்பாக கீபிங் மற்றும் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.