கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை பாகிஸ்தான் தொடங்குகிறது.
சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் மூன்று மருத்துவ பரிசோதனைகளை பாகிஸ்தான் தொடங்கியது என்று நாட்டின் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் அமர் இக்ரம் இன்று தெரிவித்தார்.
இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், இந்த தடுப்பூசி ஏற்கனவே விலங்குகளுக்கு செலுத்தி பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மனிதர்களுக்கும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படும் என்று அதிக எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினர்.
இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் பயனளிக்கும் என்று கூறினார். இந்த தடுப்பூசி பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானில் இதுவரை 306,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் 6,420 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.