சீனாவுடனான போர்ப்பதற்ற நிலையில், லடாக்கில் ராஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்பு!
சீனாவுடனான போர்ப்பதற்ற நிலையில், லடாக்கில் ராஃபேல் போர் விமானங்கள் கண்காணிப்புக்காக பறக்கின்றன.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் லடாக் மலைப்பகுதிகளில் தற்பொழுது சீனாவுடன் மோதல் நிலவி வரக் கூடிய சூழ்நிலையில் கண்காணிப்புக்காக அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையினர் ஈடுபடுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக விமானங்களில் சில சக்திவாய்ந்த ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன, பதற்றமான சூழ்நிலைகளை கண்காணிப்பதற்காக இந்த ரஃபேல் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.