145 to 155 கீ.மீ வேகத்தில் பந்து வீச பயிற்சி எடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்..!
13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் 1சென்னை அணி மும்பை அணியை தோற்கடித்து முதல் போட்டியை வெற்றியாக தொடங்கி இரண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஸ்டீவ் ஸ்மித் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அதைபோல் ராஜஸ்தான் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்று வருகிறார், மேலும் அவர் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, அதில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 145 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார்.
From 145 kmph to 155 kmph… how excited are you? ⚡#RRvCSK | #HallaBol | #IPL2020 pic.twitter.com/RHDHiGPFyz
— Rajasthan Royals (@rajasthanroyals) September 22, 2020