21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளி கல்வித்துறை!
21-25 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் பெரும் தொற்றாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதிலும் அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு கொண்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் வருகிற 25-ஆம் தேதி வரையும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வகுப்புகள் நடத்த கூடாது எனவும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நான்கு நாட்களுக்கு நடத்தக்கூடாது எனவும் மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் எச்சரித்துள்ளார்.